நாசரேத் கதீட்ரலில் ஆண்கள் ஐக்கிய சங்க கிறிஸ்துமஸ் ஆராதனை
நாசரேத் கதீட்ரலில் ஆண்கள் ஐக்கிய சங்க கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.
நாசரேத்:
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற அளவிலான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நாசரேத் கதீட்ரலில் நடைபெற்றது. கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் வெல்ட்டன் ஜோசப் தலைமை தாங்கினார். தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், உப தலைவர் தமிழ்செல்வன், நாசரேத் கதீட்ரல் தலைமை குருவானவர் மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்க இயக்குநர் குருவானவர் ராபின்சன் வரவேற்று பேசி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்த ஆராதனையில் சபை மன்றத்தில் உள்ள அந்தந்த சேகர ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல்கள் பாடினர். சிறப்பு கிறிஸ்துமஸ் செய்தியை நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெபராஜ் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் கதீட்ரல் உதவி குருவானவர் பொன் செல்வின் அசோக்குமார் மற்றும் நாசரேத் ஆண்கள் ஐக்கிய சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.