ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் நர்சிங் பயிற்சி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆண் செவிலியர் பணியிடை நீக்கம்


ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் நர்சிங் பயிற்சி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை-  ஆண் செவிலியர் பணியிடை நீக்கம்
x

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் நர்சிங் பயிற்சி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆண் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் நர்சிங் பயிற்சி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆண் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பாலியல் தொல்லை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த மாதம் செவிலியர் பயிற்சி மாணவி ஒருவரிடம், மருத்துவமனையில் பணியாற்றும் ஆண் செவிலியர் ஒருவர் கையை பிடித்து, பாலியல் தொல்லை கொடுக்க செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டு அங்கிருந்து தப்பி சென்றார். மேலும் இதுகுறித்து அந்த மாணவி மருத்துவ கல்லூரி டீன் மனோகரியிடம் புகார் அளித்தார். இதன்பேரில் மருத்துவமனை டீன் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட கமிட்டி அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

பணியிடை நீக்கம்

இந்தநிலையில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவி இடம் தகாத முறையில் ஈடுபட முயற்சித்த புகாரின் பேரில் மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஆண் செவிலியர் சுரேஷ் (வயது 38) என்பவரை மருத்துவ கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது. மேலும் இதுதொடர்பாக தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து புகாரின் பேரில் ஊட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நர்சிங் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுரேஷ் விரைவில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.



Next Story