பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில்4-வது நாளாக ஜமாபந்தி


பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில்4-வது நாளாக ஜமாபந்தி
x

பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் 4-வது நாளாக ஜமாபந்தி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் 4-வது நாளாக ஜமாபந்தி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது.

ஜமாபந்தி

பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் 4 -வது நாளாக மெலட்டூர் சரகத்திற்கு ஜமாபந்தி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிட் இருந்து பெறப்பட்ட 94 மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். இந்த முகாமில் 2 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணையும், ஒருவருக்கு பட்டா உட்பிரிவு மாறுதல் ஆணையும், ஒருவருக்கு குடும்ப அட்டையில் திருத்தம் செய்து ஒருவருக்கும் வழங்கினார்.

இதில் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் முத்து வடிவேல், பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முருககுமார், கலெக்டரின் அலுவலக மேலாளர் ரத்தினவேல், துணை தாசில்தார்கள் தமயந்தி, விவேகானந்தன், பிரியா, விமல், வருவாய் ஆய்வாளர் கணேஷ், வட்ட துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்ட சார்ஆய்வாளர் விஜயகுமார், உதவியாளர் செல்வராணி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றுமு், பிற துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்

இதேபோல் கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 11-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி 4-வது நாளாக நேற்று நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கும்பகோணம் சரகத்துக்குட்பட்ட சோழன்மாளிகை கருப்பூர், கீழக்கொருக்கை, அண்ணலக்ரஹாரம், மாத்தி, தாராசுரம், திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள்கோவில், தேனாம்படுகை தட்டுமால், பட்டீஸ்வரம் படுகை, பட்டீஸ்வரம், சோழன்மாளிகை, ஆரியப்படைவீடு, தேனாம்படுகை, உடையாளூர், தில்லையம்பூர், சேஷம்பாடி, மேலக்கொற்கை, மருதாநல்லூர், திப்பிராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து

பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சிட்டா அடங்கல் உள்ளிட்டவை கோரி மனுக்களை கோட்டாட்சியர் பூர்ணிமாவிடம் வழங்கினர். இதில் வரப்பட்ட மொத்தம் 176 மனுக்களில் 25 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

மனுக்கள் பரிசீலனை

மீதி 151 மனுக்கள் அந்தந்த துறைக்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் வெங்கடேஸ்வரன், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பிரேமாவதி, வட்ட வழங்கல் அலுவலர் மதுசூதனன், தலைமையிடத்து துணை தாசில்தார் பாக்கியராஜ், கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார் உத்தமசெல்வி, மண்டல துணை தாசில்தார்கள் சாந்தமீனா, சண்முகம், வட்ட சார் ஆய்வாளர் பிரசாந்த் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டர்.


Next Story