பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் வாலிபர் தீக்குளிப்பு


பெரியகுளம் போலீஸ் நிலையத்தில்  வாலிபர் தீக்குளிப்பு
x

பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்

தேனி

விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 34), வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் விஜயராஜ் (21). இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் தேனிக்கு வந்தனர். பின்னர் நேற்று தேனியில் இருந்து அரசு பஸ்சில் திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது விஜயராஜ் அவதூறாக பேசி வந்ததாக தெரிகிறது. இதனை கண்டக்டர் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர் மாரிமுத்து பஸ்சை பெரியகுளம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு விஜயராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர் மோட்டார்சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். இதில் அவர் உடலில் தீ பற்றியதை பாா்த்த போலீசார் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னா் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story