தபால் அலுவலகங்களில் பண முதலீடுக்கான தங்கப்பத்திரம் விற்பனை


தபால் அலுவலகங்களில்   பண முதலீடுக்கான தங்கப்பத்திரம் விற்பனை
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தபால் அலுவலகங்களில் பண முதலீடுக்கான தங்கப்பத்திரம் விற்பனை திங்கட்கிழமை தொடங்கி, 27-ந்தேதி வரை நடக்கிறது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் பண முதலீட்டுக்கான தங்கப்பத்திர திட்டம் இன்று(திங்கட்கிழமை) தொடங்கி 27-ந் தேதி வரை நடக்கிறது.

தூத்துக்குடி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தங்கப்பத்திரம் விற்பனை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இந்திய தபால் துறை சார்பில் தபால் அலுவலகங்களில் பணமுதலீடு செய்யும் சாவரின் தங்கப்பத்திரம் 3-வது விற்பனை இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை தபால் அலுவலகங்களிலும் தங்கபத்திரம் விற்பனை நடக்கிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5 ஆயிரத்து 409 ஆகும். இந்த திட்டத்தில் ஒருவர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை பணம் முதலீடு செய்து பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம். முதலீடு செய்து உள்ள பணத்திற்கு ஆண்டிற்கு 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். வட்டித்தொகை 6 மாதங்களுக்கு ஒருமுறை முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

காகித வடிவில்...

இதன் மூலம் வீடுகளில் தங்கம் காகித வடிவில் மட்டுமே இருக்கும். எனவே தங்க நகைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. 8 ஆண்டுகளில் இப்பத்திரம் முதிர்வடையும். இருந்தாலும் 5 ஆண்டுகளுக்கு பின் பத்திரங்களை எப்போது வேண்டுமானாலும் சரண்டர் செய்து பணம் பெறலாம். அவசர தேவைக்கு தங்கப்பத்திரத்தை அரசு, தனியார் வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற முடியும். இந்த பத்திரத்தை பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பான்கார்டு நகல் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். மேலும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர் போன்ற ஏதாவதொரு அடையாள அட்டை நகலும் கட்டாயம் இணைக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து தலைமை. துணை மற்றும் கிராமப்புற தபால் நிலையங்களிலும் இதற்கான வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் விபரங்களுக்கு அஞ்சல் வணிக அலுவலுவர்களை 9942693129. 9791655030 மற்றும் 7826013510 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story