சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
தூத்துக்குடி
தட்டார் மடம்:
சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கருத்தரங்கிற்கு பள்ளி தாளாளர் நோபுள்ராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் டினோ முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றார். சாத்தான்குளம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம், விலங்குகளால் பரவும் நோய்கள், பாதிப்பு குறித்து விளக்கி பேசினார். சுகாதார ஆய்வாளர் அருண் உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story