சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்


சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் பள்ளியில்  கராத்தே பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம் நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் வைத்து கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் பட்டயத்தேர்வு நடைபெற்றது. இம்முகாமில் சோபுக்காய் கோஜூரியு கராத்தே டூ இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் பயிற்சி அளித்தார். இம்முகாமில் பள்ளியில் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்ப பயிற்சி முகாமிற்கு பள்ளி முதல்வர் நோபிள் ராஜ் தலைமை தாங்கினார். பயிற்சி முகாமில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி இயக்குனர் டினோமெலினா ராஜாத்தி மற்றும் தலைமையாசிரியர் சாந்தி ஆகியோர் சான்றிதழ் மற்றும் பட்டயத்தை வழங்கி பாராட்டினார். இம்முகாம் ஏற்பாடுகளை சோபுக்காய் கோஜூ ரியு கராத்தே சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சென்சாய் செந்தில், செயலாளர் சென்சாய் முத்துராஜா ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் துணை பயிற்சியாளர் ஆரோன் ஜெபஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவன் ஹிரேஷ் அதிபன் கோவாவில் நடைபெறும் அகில இந்திய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.


Next Story