சாத்தான்குளம் பள்ளியில் ஊரக திறனாய்வு தேர்வு
சாத்தான்குளம் பள்ளியில் ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
தமிழக அரசு சார்பில் கிராமப்புறங்களில் 8-ஆம் மாணவர்களுக்கு தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் வரை உதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆர்.எம்.பி புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வுக்கு சாத்தான்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் 247 ேபர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 244 மாணவ, மாணவியர் தேர்வை எழுதினர்.
தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஏ.எஸ். கிருபாகரன், தலைமைஆசிரியர் ஜெபசிங்இம்மானுவேல் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story