சாத்தான்குளம் பள்ளியில்ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா


சாத்தான்குளம் பள்ளியில்ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் பள்ளியில் ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சாத்தான்குளம் வட்டக்கிளை சார்பில் இயக்க உறுப்பினர்கள் கூடுகை விழா, மகளிர் தினவிழா மற்றும் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சாத்தான்குளம் டி.என்.டி.ஏ.ஏ.டி. ஆர். எம்.பி. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மகளிர் தினவிழாவுக்கு பேரூராட்சித்தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜெயசீலி முன்னிலை வகித்தார். வட்டார துணைத் தலைவர் சாந்தி வரவேற்றார். இதில் பொத்தகாலன்விளை ஆர்.சி பெண்கள் ஆரம்ப பள்ளி தலைமைஆசிரியை பெரியநாயகி, மாவட்ட துணைத் தலைவர் ரோஸ்லீன் அன்னலீலா, திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி ஆகியோர் பேசினர்.

பின்னர் நடைபெற்ற இயக்க உறுப்பினர்கள் கூடுகை மற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவுக்கு வட்டார தலைவர் மாணிக்கராஜ் தலைமை தாங்கினார். வட்டார செயலர் ஸ்டீபன்தாஸ் வரவேற்றார். பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் இயக்க மாநில பொதுச் செயலர் மயில், மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், சாத்தான்குளம் சேகர குருவானவர் செல்வன் மகாரஜா, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் செந்தூரராஜன் உள்ளிட்ட பலர் பேசினர். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. வட்டார துணைத் தலைவர் அந்தோணி கிறிஸ்டி ஜீவரத்தினம் நன்றி கூறினார்.


Next Story