சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில்  மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம்
x

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம் போனது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 3½ டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கும், முல்லை ரூ.660-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.61-க்கும், பட்டுப்பூ ரூ.59-க்கும், ஜாதிமல்லி ரூ.650-க்கும், கனகாம்பரம் ரூ.1,050-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும், அரளி ரூ.260-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.140-க்கும் ஏலம் போனது.


Related Tags :
Next Story