சத்தி மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.1,855-க்கு ஏலம்ஜாதிமல்லி ஒரே நாளில் கிலோ ரூ.400 விலை உயர்வு


சத்தி மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.1,855-க்கு ஏலம்ஜாதிமல்லி ஒரே நாளில் கிலோ ரூ.400 விலை உயர்வு
x
தினத்தந்தி 17 Feb 2023 1:00 AM IST (Updated: 17 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மல்லிகைப்பூ

ஈரோடு

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,855-க்கு ஏலம் போனது. ஜாதிமல்லி ஒரே நாளில் கிலோ ரூ.400 விலை உயர்ந்தது.

மல்லிகைப்பூ ரூ.1,855

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினசரி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 2 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,855-க்கும், முல்லை ரூ.1,440-க்கும், காக்கடா ரூ.1,400-க்கும், செண்டுமல்லி ரூ.110-க்கும், பட்டுப்பூ ரூ.125-க்கும், ஜாதிமல்லி ரூ.1,400-க்கும், கனகாம்பரம் ரூ.765-க்கும், சம்பங்கி ரூ.180-க்கும், அரளி ரூ.280-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.140-க்கும் ஏலம் போனது.

ஜாதிமல்லி

இதேபோல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,837-க்கும், முல்லை ரூ.1,600-க்கும், காக்கடா ரூ.1,000-க்கும், செண்டுமல்லி ரூ.66-க்கும், பட்டுப்பூ ரூ.135-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.220-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.

நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.18 விலை உயர்ந்திருந்தது. இதேபோல் காக்கடா கிலோ ஒன்று ரூ.400-ம், செண்டுமல்லி ரூ.44-ம், ஜாதிமல்லி ரூ.400-ம், கனகாம்பரம் ரூ.265-ம் செவ்வந்தி ரூ.20-ம் விலை உயர்ந்து ஏலம் போனது. மேலும் முல்லை கிலோ ஒன்று ரூ.160-ம், பட்டுப்பூ ரூ.10-ம் விலை குறைந்திருந்தது.

ஜாதிமல்லி, காக்கடா, கனகாம்பரம் ஆகிய பூக்கள் விலை உயர்வு குறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறும்போது, 'தொடர்ந்து 2 நாட்கள் முகூர்த்த நாள் மற்றும் விசேஷங்கள் இருப்பதால் வியாபாரிகள் பூக்களை அதிக விலைக்கு ஏலம் எடுத்து செல்கிறார்கள்' என்றனர்.


Next Story