சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.647-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில்  மல்லிகைப்பூ கிலோ ரூ.647-க்கு ஏலம்
x
தினத்தந்தி 20 Oct 2022 1:00 AM IST (Updated: 20 Oct 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

சத்தி மார்க்கெட்

ஈரோடு

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 3 டன் பூக்களை எடுத்து வந்திருந்தார்கள்.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.647-க்கும், முல்லை ரூ.500-க்கும், காக்கடா ரூ.400-க்கும், செண்டுமல்லி ரூ.38-க்கும், பட்டுப்பூ ரூ.51-க்கும், ஜாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும், அரளி ரூ.180-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.


Next Story