சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்


சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாடகை செலுத்தவில்லை

சீர்காழி பழைய பஸ் நிலையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 84 கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் 12 கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தவில்லை. கொரோனா காலத்தில் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வாடகை செலுத்தவில்லை. எனவே வாடகை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டிருந்தனர்.

கடைகள் அடைத்து போராட்டம்

இந்த நிலையில் வாடகை தொகை செலுத்தாத 12 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கால அவகாசம் கொடுக்காமல் கடைகளுக்கு சீல் வைத்ததை கண்டித்தும், நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அமைந்துள்ள பகுதியில் மின்விளக்கு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று பழைய பஸ் நிலையத்தில் உள்ள 84 கடைகளையும் அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பஸ் நிலைய கடை வீதி பகுதி வெறிச்சோடி கிடந்தது.


Related Tags :
Next Story