சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில்சித்திரை திருவிழா தேரோட்டம்


சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில்சித்திரை திருவிழா தேரோட்டம்
x

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

தஞ்சாவூர்

சுவாமிமலை சுவாமி்நாதசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இ்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சித்திரை திருவிழா

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. கடந்த 2-ந்தேதி தன்னைத்தானே பூஜித்தல் நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்்சியில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், ராமலிங்கம் எம்.பி., பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், துணைத் தலைவர் சங்கர், பேரூராட்சி செயல் அலுவலர் உஷாராணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்க்கால் பார்த்தல், ஊடல், திருவீதியுலா மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. நாளை(திங்கட்கிழமை) சுவாமிகள் விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்தனர்.


Next Story