தொட்டிபாளையத்தில்இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்;புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோாிக்கை


தொட்டிபாளையத்தில்இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்;புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோாிக்கை
x

தொட்டிபாளையத்தில் இடிந்து விழும் நிலையில் வீடுகள் உள்ளன. இதனால் புதிதாக வீடு கட்டி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு

பவானி

தொட்டிபாளையத்தில் இடிந்து விழும் நிலையில் வீடுகள் உள்ளன. இதனால் புதிதாக வீடு கட்டி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொகுப்பு வீடுகள்

பவானியை அடுத்த தொட்டிபாளையம் ஊராட்சி பழைய காலனியில் கடந்த 2007-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் 9 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.

இந்த தொகுப்பு வீடுகள் முறையாக பராமரிக்கப்படாததால் வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் காரைகள் பெயர்ந்து விழுந்து விட்டன. இதனால் வீட்டின் மேற்கூரையில் உள்ள இரும்பு கம்பிகள் எலும்புக்கூடு போன்று தெரிகின்றன.

இடிந்து விழும் நிலையில்...

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கருப்பன்- மினியாள் என்ற தம்பதியினர் கூறுகையில், '17 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் 15 குடும்பத்தினர் வசித்து வந்தோம். இதில் 9 குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த வீடுகளின் மேற்கூரைகளின் காரைகள் பெயர்ந்து விழுந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. 17 குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இன்று எங்களுடைய வாரிசுகள் என 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இதனால் வீட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. நாங்கள் அனைவரும் விவசாய கூலிகளே. எங்களுக்கு போதிய வருமானம் இல்லை. எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக வீடு கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் எங்களுடைய வாரிசுகளுக்கு அரசு சார்பில் வீட்டுமனை வழங்க வேண்டும்.' என்றனர்.


Next Story