கீழடியில், 2 அடி நீள செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு


கீழடியில், 2 அடி நீள செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
x

கீழடியில் 2 அடி நீளமுள்ள செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை

திருப்புவனம்,

கீழடியில் 2 அடி நீளமுள்ள செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அகழாய்வு

திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் மத்திய- மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

கீழடியில் 7 குழிகள் ேதாண்டப்பட்டு அகழாய்வு மேற்கொண்டதில் கண்ணாடி பாசிமணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் மணிகள், காதணிகள், சங்கு வளையல்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய்கள், சுடுமண்ணால் செய்த சில்லு வட்டுக்கள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள், பழங்கால பெரிய பானைகள், சேதமடைந்த செங்கல் சுவர் உள்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

செங்கல் கட்டுமானசுவர்

இந்த நிலையில் கீழடியில் 8-வது குழி தோண்டி அகழாய்வு பணி நடந்தது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 கலரில் சிறிய பானையின் அடிப்பகுதி போல் தென்பட்டது. தொடர்ந்து தோண்டும் போது நேற்று 2 அடி நீளத்திற்கு செங்கல் கட்டுமான சுவர் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவரில் செங்கல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக வரிசையாக அடுக்கி வைத்து கட்டியுள்ளனர்.

குழியின் ஓரப்பகுதியில் இந்த சுவர் தென்பட்டதால் அருகில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் செய்யும்போது இதன் தொடர்ச்சி தெரியவரும். மேலும் ஆழமாக குழியை தோண்டி அகழாய்வு செய்யும் போது இதன் உயரம் குறித்தும் சரியாக கணக்கிட முடியும். தொடர்ந்து அகழாய்வு பணி நடக்கிறது.


Related Tags :
Next Story