வேளாண் அறிவியல் மையத்தில்திறன் மேம்பாட்டு பயிற்சி
சின்னமனூர் அருகே வேளாண் அறிவியல் மையத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் தொழில்முனைவோர்களுக்கான சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்த திறன்மேம்பாட்டு பயிற்சி 2 நாட்கள் நடந்தது. பயிற்சிக்கு வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) மகேஸ்வரன் வரவேற்றார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுரேஷ் கண்ணன், ஜனகர் ஜோதிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையின் சான்றிதழ் பெறும் வழிமுறைகள் குறித்து பேசினர்.
மாவட்ட தொழில்மையத்தின் மாவட்ட வளநபர் ஹரிகிருஷ்ணன், பிரதமரின் உணவு பதப்படுத்தும் திட்டங்கள் அவற்றுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்து பேசினார். சிறுதானியங்களில் இருந்து பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் தொழில்நுட்ப வல்லுனர் ரம்யாசிவசெல்வி நன்றி கூறினார்.