மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது


மளிகை கடையில்   புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 24 Sept 2022 1:00 AM IST (Updated: 24 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

பெண் கைது

ஈரோடு

ஆப்பக்கூடல் அருகே புன்னம் செங்கோடம்பாளையத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது விற்பனைக்காக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடையில் இருந்த ரூ.105 மதிப்புள்ள 6 புகையிலை பாக்கெட்டு்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளரான வெண்மதி (வயது 40) என்பவரை கைது செய்தனர்.


Next Story