கட்டபொம்மன்மணிமண்டபத்தில்வீரசக்கதேவி கோவில் கும்பாபிஷேக விழா
கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன்மணிமண்டபத்தில் வீரசக்கதேவி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறில் நாற்கரசாலையில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் மணி மண்டபம் மற்றும் அவரை தூக்கிடப்பட்ட இடத்தில் குலதெய்வமான வீரசக்கதேவி கோவில் கட்டிடம் புனரமைக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அந்த கோவிலில் கும்பாபிஷே விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று வீரசக்கதேவிக்கு கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் கயத்தாறு, கோவில்பட்டி, விருதுநகர், பாஞ்சை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை வீீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை பொறுப்பாளர் பொன்ராஜ் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story