மருத்துவ முகாமில் கடந்த 3 மாதத்தில் 14,800 பேர் பயன் அடைந்தனர்


மருத்துவ முகாமில் கடந்த 3 மாதத்தில் 14,800 பேர்   பயன் அடைந்தனர்
x

சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவ முகாமில் கடந்த 3 மாதத்தில் 14,800 பேர் பயன் அடைந்தனர்

சிவகங்கை

காரைக்குடி

வருமுன் காப்போம் திட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 14,800 பேர் பயன் அடைந்தனர் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

மருத்துவ முகாம்

கல்லல் ஊராட்சி ஒன்றியம் கண்டரமாணிக்கம் ஊராட்சி கே.வலையப்பட்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். கார்த்திக் சிதம்பரம் எம்.பி. முன்னிலை வகித்தார்.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் முகாமினை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

14,800 பேர் பயன்அடைந்தனர்

வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் நடத்தப்படவேண்டும். அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் கடந்தாண்டு 36 முகாம்கள் நடத்தப்பட்டு அதன்மூலம் 22 ஆயிரத்து 678 பேர் பயன்பெற்றனர்.

நடப்பாண்டிலும் 36 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு ஏப்ரல் முதல் தற்சமயம் வரை மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் 15 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் 14 ஆயிரத்து 800 பேர் பயன் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் 10 பயனாளிகளுக்கு மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் வழங்கினார்.

கலந்து ெகாண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாங்குடி எம்.எல்.ஏ., மருத்துவ பணிகள் இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ், கல்லல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன், துணைத்தலைவர் நாராயணன், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு.அசோகன், கல்லல் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் மஞ்சுரி லெட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்தழகு, ஆரோக்கியசாமி, மருதுபாண்டியன், அபிநயா கல்லல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story