தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மனு


தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மனு
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:16:35+05:30)

தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் சிலர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள், ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்பை சேர்ந்த சிலர் குறும்படம் எடுப்பதற்காக நேற்று எங்கள் ஊருக்கு வந்தனர். அப்போது, அவர்களிடம் பொதுமக்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். மேலும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.


Next Story