பாரியூர் கோவிலில் ரூ.12¼ லட்சம் உண்டியல் காணிக்கை


பாரியூர் கோவிலில்   ரூ.12¼ லட்சம் உண்டியல் காணிக்கை
x

ரூ.12¼ லட்சம் உண்டியல் காணிக்கை

ஈரோடு

கோபி அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விசேஷ நாட்கள், அமாவாசை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் உண்டியிலில் நேர்த்திக்கடனாக காணிக்கைகளை செலுத்தி வழிபடுவார்கள். எனவே பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவிலில் 10 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கோவிலில் உள்ள 10 உண்டியல்களை திறந்து அதில் உள்ள காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. ஈரோடு இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் ரத்தினாம்பாள், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் ஹரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.12 லட்சத்து 19 ஆயிரத்து 489-ஐ உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

மேலும் 155 கிராம் தங்கம், 48 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.


Related Tags :
Next Story