ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா


ஆரம்ப சுகாதார நிலையத்தில்  புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா
x

புதுக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

குமாரகிரி ஊராட்சி புதுக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் கூட்டாம்புளி அன்பு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தூத்துக்குடி மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.கே.ஆர்.ஜெயக்கொடி, ஒன்றிய அவைத் தலைவர் பாலசுந்தரம், மாவட்ட பிரதிநிதி நாகராஜன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வின், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சண்முகநாராயணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story