தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் கைக்குழந்தையுடன் தர்ணா


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்  மாற்றுத்திறனாளி பெண் கைக்குழந்தையுடன் தர்ணா
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டம் நடத்தினார்.

தூத்துக்குடி

சாத்தான்குளத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி லிதியாள். இவர் நேற்று காலையில் கைக்குழந்தையுடன் தூத்துக்குடியிலுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து அவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறுகையில், சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த சிலர் தன்னை தாக்கியதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் அவர் கோரிக்கை மனுவை கலெக்டர் செந்தில்ராஜிடம் கொடுத்தார்.


Next Story