ஆடிப்பெருக்கு விழாவில் இருதரப்பினரிடையே பிரச்சினை
ஆடிப்பெருக்கு விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையில் அதிகாரிகள் பேச்சுவார்த்த்தை நடத்தினர்.
ஜோலார்பேட்டை
ஆடிப்பெருக்கு விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையில் அதிகாரிகள் பேச்சுவார்த்த்தை நடத்தினர்.
நாட்டறம்பள்ளி அருகே அம்மணாங்கோவில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வெலக்கல்நத்தம் கிராமத்தில் நாளை (வியாழன்) ஆடிப்ெபருக்கு விழாவினை முன்னிட்டு ஸ்ரீ பன்னீர் முருகன் கோவிலுக்கு அபிஷேக கலசம் எடுத்துச் செல்லுதல் தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இது குறித்து நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸ் பாதுகாப்புடன் திருவிழாவினை நடத்த இரு தரப்பினரிடம் அறிவுறுத்தி எழுத்துமூலம் ஒப்புதல் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், தலைமையிடத்து துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.