தேனி சமரச, தீர்வு மையத்தில்கலந்துரையாடல் கூட்டம்
தேனி மாவட்ட சமரசம் மற்றும் தீர்வு மையத்தின் சார்பில், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு சமரசம் மற்றும் தீர்வு மையத்தின் வழிகாட்டுதல்படி, தேனி மாவட்ட சமரசம் மற்றும் தீர்வு மையத்தின் சார்பில், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட சமரசம் மற்றும் தீர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான சஞ்சய் பாபா தலைமை தாங்கி பேசினார். தமிழ்நாடு சமரசம் மற்றும் தீர்வு மையத்தின் சென்னை முதுநிலை பயிற்சியாளர் உமா ராமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில், தேனி, பெரியகுளம், உத்தமபாளையம், போடி, ஆண்டிப்பட்டியில் உள்ள அனைத்து கோர்ட்டு நீதிபதிகள், வக்கீல்கள் சங்க தலைவர்கள், மத்தியஸ்தர்கள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதில், வழக்குகளை கோர்ட்டுகளில் இருந்து சமரச மையத்துக்கு அனுப்பி சமரசம் செய்வது குறித்தும், வழக்குகளை எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்தும் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. சமரச மையத்தில் சிறப்பாக செயல்பட்டு அதிக வழக்குகளை முடித்த மத்தியஸ்தர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் மாவட்ட சமரசம் மற்றும் தீர்வு மைய ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.