திருச்ெசந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தலைமை பண்புகள் குறித்த பயிற்சி முகாம்
திருச்ெசந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தலைமை பண்புகள் குறித்த பயிற்சி முகாம்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு மற்றும் சமவாய்ப்பு மையம் சார்பில் தலைமை பண்புகள் என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். சமவாய்ப்பு மைய ஆலோசகர் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை ராமஜெயலட்சுமி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதில் பாளையங்கோட்டை புனித ஜான்ஸ் கல்லூரி உதவிப்பேராசிரியர் ரத்தின பிரபு, மெப்கோ ஸ்லனக் பொறியியல் கல்லூரி ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் ராஜகுமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து ெகாண்டு பேசினர். ரத்தினபிரபு பேசுகையில், தனிமனிதனின் தலைமை பண்பு சூழ்நிலை வரும்போது வெளிவரும் என்றும், தலைமை பண்பின் குணாதியசயங்களான தகவல்பரிமாற்றம், அணுகுமுறை, பொறுப்புணர்ச்சி, உணர்ச்சிபூர்வ அறிவு ஆகியவை குறித்து விளக்கி பேசினார். ராஜகுமரன் பேசுகையில், தலைமை பண்புகளான புரிதல், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை மிகச்சிறந்த தலைவர்களை மேற்கோள் காட்டி விளக்கமளித்தார். இதில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சமவாய்ப்பு மைய உறுப்பினர் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை முனீஸ்வரி, முதலாமாண்டு முதுகலை பொருளியல் துறை மாணவர் செல்வம் ஆகியோர் நன்றி கூறினர். இம்முகாமில் ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி, பேராசிரியைகள் ஆரோக்கியமேரி பெர்னான்டஸ், ரீட்டா யசோதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.