திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாகவியல்துறை அமைப்பு தொடக்கவிழா


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்  வணிக நிர்வாகவியல்துறை அமைப்பு தொடக்கவிழா
x

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாகவியல்துறை அமைப்பு தொடக்கவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை அமைப்பு தொடக்கவிழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் வழிகாட்டுதல்படி நடந்த விழாவில் தோழப்பண்ணை அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியரும், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது ெபற்றவருமான எஸ்.ஜோசப் லெனிஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நல்லாசிரியர் விருது பெற்ற அவருக்கு பொன்னாைட போர்த்தி கவுரவிக்கப்பட்டது.

அவர் பேசுகையில், மாணவர்கள் படிப்பில் சிறந்தவர்களாகவும், பெற்றோரை மதிப்பதில் மிகச்சிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை தங்களது மேன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும், என்றார்.

விழாவில் வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அ.அந்தோணி சகாய சித்ரா வரவேற்று பேசினார். மாணவர் செயலர் எம்.பாலகணேஷ் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை அமைப்பின் பொறுப்பாளர் எம்.ஆர்.கார்த்திகேயன் செய்திருந்தார். விழாவில் பேராசிரியர்கள் டி.செல்வகுமார், சுதா, செல்வி, நிவேதா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story