திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தீபாவளி கொண்டாட்டம்


தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அகதர மதிப்பீட்டுக்குழு மற்றும் ஆதித்தனார் விழாக்குழு சார்பில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர் ஆர்.தனலட்சுமி கலந்து கொண்டு பேசுகையில், தீபாவளியின் சிறப்பு பற்றியும், அப்பண்டிகை நமக்கு கற்றுத்தரும் பாடம் குறித்தும் தெளிவாக விளக்கி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு அகதர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் அ.அந்தோணி சகாய சித்ரா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை வகித்து பேசினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஐ.சேகர் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார். கார்த்திகேயன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாக்குழு இயக்குனர் பி.ஆரோக்கிய மேரி பர்னாட்டஸ் நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணிப்பொறி துறை சார்பில், கல்லூரிகளுக்கு இடையே கணிப்பொறி துறை தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கணிப்பொறி துறை தலைவர் வேலாயுதம் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

பேப்பர் பிரசன்டேசன், மென்பொருள் தவறுகளை கண்டுபிடித்து சரிசெய்தல், வினாடி-வினா, இணையதள வடிவமைப்பு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் 12 கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் பரிசுக்கோப்பை, சான்றிதழ் வழங்கினார். ஏற்பாடுகளை கணிப்பொறி துறை தலைவர் வேலாயுதம், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை இன்பரோஜா, பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், பிரீத்தி, பிருந்தா, ஆய்வக உதவியாளர் மாதவன் மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.


Next Story