திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்  கண் பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம், நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மோகன்ஸ் நீரிழிவு மையம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிேசாதனை மற்றும் நீரிழிவு நோய் கண்டறிதல் முகாமை நடத்தியது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் முகாமில் பங்கேற்றார். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ச.மோதிலால் தினேஷ் ஏற்பாடுகளை செய்திருந்தார். முகாமில் முத்துக்குமார், சிவந்தி சமுதாய வானொலி சார்பாக கண் மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரிடம் நேர்காணல் செய்தார். முகாமில் 50 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை, அலுவலர்கள், மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ரத்த அழுத்தம், கிட்டப்பார்வை, தூரப்பார்வை பரிசோதனை செய்யப்பட்டது.


Next Story