திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆரோக்கிய மன்ற தொடக்க விழா
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆரோக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆரோக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். மன்ற இயக்குனர் கவிதா வரவேற்று பேசினார். அக்குபங்சர் சிகிச்சையாளர் சங்கரசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்கள் ஆரோக்கியமாக உடலை பேணி காக்க வேண்டியதன் இன்றியமையாமை பற்றியும், ஆரோக்கியத்தை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கி பேசினார். மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் அவர் விளக்கம் அளித்தார். மன்ற செயல் உறுப்பினர் தீபாராணி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மன்ற மாணவர் செயலர் சந்தோஷ் செய்திருந்தார்.
இதேபோன்று, கணினி அறிவியல் (சுயநிதிப்பிரிவு) துறையில் 'கிளவுட் கம்ப்யூட்டிங்' என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. பெங்களூரு மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர் ஆர்.என்.ரவீஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, துறைத்தலைவர் கவிதா வரவேற்று பேசினார். பேராசிரியர் பெனட் நன்றி கூறினார். விழாவில் பேராசிரியைகள் ஜெயந்தி, சகாய ஜெயசுதா, ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து ெகாண்டனர்.