திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. அமைப்பாளர் பேராசிரியர் கவிதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பொருளியல் துறை தலைவர் மாலைசூடும் பெருமாள் சிறப்புரையாற்றினார். அவரை பேராசிரியர் சேவியர் பெஸ்கி ஆரோக்கியராஜ் அறிமுகம் செய்தார்.

விழாவில் ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி, பேராசிரியர்கள் ராமஜெயலட்சுமி, ரீட்டா யசோதா, சத்தியலட்சுமி, சோலா பெர்னாண்டோ, லெனின், முனீஸ்வரி, பர்வதவர்தினி, மோதிலால் தினேஷ், தாவீதுராஜா, பாரதி, முகம்மது முகைதீன் காதரியா மற்றும் மாணவ செயலாளர்கள் சிவகணேஷ், அஜித்செல்வன், சந்தோஷ் ஜோசப், மதன்குமார் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா முடிவில் அமைப்பு செயலர் பேராசிரியர் உதயவேல் நன்றி கூறினார்.


Next Story