திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்இயற்பியல்துறை பன்னாட்டு கருத்தரங்கம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இயற்பியல்துறை பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில், 'அறிவியல் உபகரணம் உருவாக்குவதில் தொழில்நுட்ப முக்கியத்துவம் வாய்ந்த மூலப்பொருள்' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு சென்னை சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரியின் மூத்த அறிவியல் விஞ்ஞானி முத்து செந்தில்பாண்டியன், சீனாவின் ஹெெபன்ங் நகரிலுள்ள ஹென் பல்கலைக்கழக வேதியியல் மற்றும் மூலக்கூறு ஆய்வக விஞ்ஞானி ஸ்ரீகேசவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், ஆதித்தனார் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த கல்லூரி தலைவர் அதிக அளவில் பொருளுதவி செய்து ஊக்கமளிக்கிறார். மாணவர்கள் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார். இயற்பியல் துறை தலைவர் பாலு வரவேற்று பேசினார்.
இக்கருத்தரங்கில்,நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை சார்ந்த மாணவர்கள் நேரடியாகவும், தைவான், சீனா, தென்கொரியா நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் ஊடகங்களின் வாயிலாகவும் சமர்ப்பித்தனர். ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை கல்லூரி முதல்வர் வெளியிட, மூத்தவிஞ்ஞானி பெற்று கொண்டார். சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கில் ெடல்லி, கொல்கத்தா, மும்பை, கேரளாவை சேர்ந்த மாணவர்கள், சிவசுப்பிரமணிய நாடார் பொறியல் கல்லூரி, பாரதியார், பாரதிதாசன், அழக்கப்பா, மனோன்மணியம் சுந்தரனார் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, வாவு வஹீதாகல்லூரி, ம.தி.தா. இந்து கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, நாகர்கோவில் ஜெ.பி.கலைக்கல்லூரி, தென்காசி கடையநல்லூர் ெமரிட்கல்லூரி, நாசரேத் மர்காசிஸ் கல்லூரி, நெல்லை சேவியர் கல்லூரி, ஜான்ஸ் கல்லூரி, ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரி, வ.உ.சி. கல்லூரி, ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி, புனித மரியன்னை கல்லூரி, கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி, ஜீ.வி.என்.கல்லூரி, கோவில்பட்டி துரைச்சாமி நாடார் கல்லூரி, சாத்தூர் ஸ்ரீராமசாமி நாயுடு நினைவுக்கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆதித்தனார் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர்கள் ஸ்ரீதேவி, ேசகர், லிங்கேஷ்வரி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.