திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்  மரக்கன்றுகள் நடும் விழா
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தோட்டக்கலை கிளப் சார்பில், நோனி மூலிகை தோட்டம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நோனி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நோனி தாவரத்தின் முக்கியத்துவம் குறித்து தோட்டக்கலை இயக்குனர் பாலகிருஷ்ணன் விளக்கி கூறினார். பேராசிரியர் மேரி பர்னாந்து தோட்டக்கலைத்துறை அறிக்கையை வாசித்தார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

கல்லூரி முதல்வர் மகேந்திரன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். பேராசிரியர்கள் ரமேஷ், சுந்தர வடிவேல், கதிரேசன், முத்துகுமார், வசுமதி, கவிதா மற்றும் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டினர்.

இதேபோன்று இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், கல்லூரி தோட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பனை விதைகள் விதைக்கப்பட்டன.

விழாவில் இளையோர் செஞ்சிலுவை சங்க இயக்குனர் மோதிலால் தினேஷ், பேராசிரியர்கள் லோக்கிருபாகர், மணிகண்டராஜா, ராஜ் பினோ, அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் லிங்கதுரை நன்றி கூறினார். ஏற்பாடுகளை தோட்டக்கலை பிரிவு, இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் செய்து இருந்தனர்.


Next Story