திருச்செந்தூர் பஸ் நிலையத்தில்விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல்
திருச்செந்தூர் பஸ்நிலையத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பஸ்நிலையத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பதுக்கி வைத்திருந்தனர்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
மேலும் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டம் சோலைதேவன்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் அபிஷ் என்ற மருது (22), தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்த லிங்கம் மகன் தங்கமாரியப்பன் (22) என்பதும் தெரியவந்தது.
பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.