திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பிளஸ்-2 மாணவர்களுககு செறிவூட்டல் நிகழ்ச்சி


திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்  பிளஸ்-2 மாணவர்களுககு செறிவூட்டல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பிளஸ்-2 மாணவர்களுககு செறிவூட்டல் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில், கணிதவியல் துறை, வேதியியல் துறை, கணிப் பொறியியல் துறை மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை ஆகிய நான்கு துறைகளும் இணைந்து பிளஸ்-2 மாணவர்களுக்கான செறிவூட்டல் நிகழ்ச்சி நடத்தியது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் அனிதா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், கணிதவியல் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கணித அறிவைத் தூண்டும் வகையில் எளிமையாக கணித மாதிரிகள் மற்றும் கணித புதிர்கள் நடத்தப்பட்டன.

வேதியியல் துறையின் சார்பில், வேதியியல் செய் முறையில், கரிம பண்பறி பகுப்பாய்வில், கரிம வினை தொகுதிக்கான சோதனையினை எளிய முறையில் விளக்கத்துடன் மாணவிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

கணிப்பொறியியல் துறையின் சார்பில் "இணைய பக்கம் உருவாக்குதல்" என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.

கணினி பயன்பாட்டியல் துறை சார்பில், கட்டமைப்பு வினவல் மொழியைப் பயன்படுத்தி, தரவுத்தளம் மற்றும் தொடர்பு கட்டமைப்புகளை உருவாக்க, உறவுகளில் இருந்து தரவை செருகுதல், மாற்றுதல், நீக்குதல், எளிமையான மற்றும் சிக்கலான வினவல்களை செய்யவும் பள்ளி மாணவிகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இதில், திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி முதுகலை ஆசிரியர்கள் 3 பேரும், 12-ம் வகுப்பு மாணவிகள் 120 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை வேதியியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவிகள் அஜீநிஷா, மாலதி ஐஸ்வர்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில், கணிப் பொறியியல் துறை உதவி பேராசிரியர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணிதவியல் துறைத்தலைவர் தங்கம், வேதியியல் துறைத்தலைவர், கலைச்செல்வி, கணிப்பொறியியல் துறைத்தலைவர் செல்வ நாயகி மற்றும் கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் அனிதா மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


Next Story