திருச்செந்தூர்-கோவில்பட்டியில்வ.உ.சி.பிறந்தநாள் விழா
திருச்செந்தூர்-கோவில்பட்டியில் வ.உ.சி.பிறந்தநாள் விழாகொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர், கோவில்பட்டி பகுதியில் வ.உ.சி. பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் சன்னதித்தெரு சைவ வேளாளர் ஐக்கிய சங்கத்தில் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு சங்கத்தலைவர் ஆனந்தராமச்சந்திரன் மாலை அணிவத்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், சைவ வேளாளர் ஐக்கிய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், செந்தில்குமார், நகர செயலாளர் வாள் சுடலை, ஒன்றிய அவைத்தலைவர் குழந்தைவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட பிரதிநிதி ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர், நகர செயலாளர் மகேந்திரன், நகர துணை செயலாளர் செல்வசண்முகசுந்தர் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் சார்பில் மாவட்ட துணை தலைவர் ராமன் அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பாலன், மாவட்ட துணை தலைவர் இசக்கிமுத்து உள்ளிட்டோரும், வ.உ.சி. நற்பணி மன்றம் சார்பில் தலைவர் பரமேஸ்வரனும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி
இதேபோன்று கோவில்பட்டியிலுள்ள அவரது சிலைக்கு சைவ வேளாளர் சங்க தலைவர் தெய்வேந்திரன் தலைமையில், துணை தலைவர் நடராஜன், செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலசுப்ரமணியன், துணை செயலாளர் பிரபு, தணிக்கையாளர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தி.மு.க.
வ.உ.சி.சிலைக்கு நகர தி.மு.க.செயலாளர் கருணாநிதி தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், நகர அவைதலைவர் முனியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.-ம.தி.மு.க.
வடக்கு மாவட்டஅ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், வளர்மதி, மோகன், நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
ம.தி.மு.க. நிர்வாகிகள் நகர செயலாளர் பால்ராஜ் தலைமையில் இளைஞர் அணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி செண்பகராஜ், பூல் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினா்.
சசிகலா பேரவை சார்பில் தென்மண்டல அமைப்பாளர் மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பா.ஜ.க.
பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்ன கேசவன் தலைமையில் மாவட்ட பொது செயலாளர் வேல் ராஜா, நகர தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் அவரதுசிலைக்கு மாலை அணிவித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், நகர செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் நிர்வாகிகள் அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர். மக்கள் நீதி மைய்யம் மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தே.மு.தி.க.
தே.மு.தி.க. மாவட்ட அவை தலைவர் கொம்பையா பாண்டியன், நகர செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமையில் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
மந்தித்தோப்பு கிராமத்தில் தெற்கு ஒன்றிய ம.தி.மு.க. துணை செயலாளர் மாரிமுத்து ஏற்பாட்டில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும், பொங்கல் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.