திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்குடும்பத்துடன் சீமான் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சீமான் சாமி தரிசனம் செயதார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் 2 அடி உயர தங்கவேலை உண்டியலில் காணிக்கையாக வழங்கினார்.
கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு குறித்த நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியை அனைத்து தமிழர்களும் கொண்டாட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் வெல்வதை மட்டுமே இலக்காக கொண்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
தமிழகத்தில் கல்வி பயில்வதற்காக நகைகளை அடமானம் வைத்து படிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்குகிறது. இதுதான் திராவிட மாடல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதனால் அவர்கள் தப்பித்துக்கொண்டனர். கள்ளச்சாராயம், விஷச்சாராயம் நேற்று காய்ச்சி இன்று குடித்த நிகழ்வு அல்ல. பல ஆண்டுகளாக இது நடைபெற்று வருகிறது. அரசு விற்றால் சாராயம், தனியார் விற்றால் கள்ளச்சாராயமா?. தமிழகத்தில் மதுவை ஒழிக்க நினைப்பவர்கள் வந்தால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியம். இவ்வாறு அவர் கூறினார்.