தூத்துக்குடி விமான நிலையத்தில்அ.தி.மு.க. பொதுச்செயலாளர்எடப்பாடிபழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு


தினத்தந்தி 19 Oct 2023 12:15 AM IST (Updated: 19 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு கொடு்க்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ ஆகியோர் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். மேளதாளங்கள் முழங்கவும், தொண்டர்கள் வழிநெடுக உற்சாக குரல் எழுப்பியும் மலர் தூவியும் வரவேற்றனர். நிர்வாகிகள் தொடர்ச்சியாக பூங்கொத்து கொடுத்துக் கொண்டே இருந்ததால், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தை விட்டு வெளியில் செல்வதற்கே நீண்ட நேரம் பிடித்தது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாநில வக்கீல் அணி செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை, அரசு வக்கீல் சுகந்தன் ஆதித்தன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சுரேஷ் பாபு, மாவட்ட பிரதிநிதி ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர், ஆறுமுகநேரி முன்னாள் நகர செயலாளர் கே.கே.அரசகுரு உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.


Next Story