தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு


தூத்துக்குடி விமான நிலையத்தில்  கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.க்கு தலைமை பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு எஸ். சொர்ணகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தார்.

தூத்துக்குடி

ஏரல்:

தி.மு.க. துணை பொது செயலாளராக பொறுப்பேற்று செவ்வாய்க்கிழமை தூத்துக்குடிக்கு கனிமொழி எம்.பி. வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா முன்னிலையில் கனிமொழி எம்.பி.க்கு தலைமை பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு எஸ். சொர்ணகுமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாணவரணி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஆர்.உமரிசங்கர், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story