தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில்ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன் வளர்ப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்ட நிதியுதவியுடன் 'ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு' குறித்த ஒரு நாள் பயிற்சி நடந்தது. பயிற்சியில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 30 பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பயிற்சியில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு கற்பிக்கப்பட்டன. பயிற்சியாளர்களுக்கு ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு குறித்த காணொலி காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பின்னர், அனைத்து பங்கேற்பாளர்களும் மீன்வளக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன் பண்ணைக்கு அழைத்து செல்லப்பட்டு நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழாவில் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொறுப்பு) சுஜாத்குமார் கலந்து கொண்டு, பயிற்சியில் பங்கேற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்த பயிற்சியின் மூலம் சுய தொழில் தொடங்குவதற்கான வழி வகைகள் குறித்து மீன்வளர்ப்பு துறை சா.ஆதித்தன் விரிவாக எடுத்து கூறி பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.