தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில்விரால் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் விரால் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி வருகிற 17-ந் தேதி நடக்கிறது
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் விரால் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
இது குறித்து தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ப.அகிலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 'விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம்' பற்றிய ஒரு நாள் பயிற்சி 17.02.2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த பயிற்சியில் விரால் மீனின் உயிரியல், சினைமீன் தேர்வு செய்தல், ஹார்மோன் செலுத்தும் முறைகள், இனப்பெருக்கம், குஞ்சு சேகரித்தல், குஞ்சுகளை வளர்க்கும் தொழில்நுட்பம், உணவு மற்றும் உணவிடுதல் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அனைவரும் ரூ.300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியாளர்கள் நேரடியாகவோ அல்லது கல்லூரி வங்கி கணக்கு வாயிலாகவோ பணத்தை செலுத்தலாம்.
முன்பதிவு
பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில்முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் 16.2.2023 மாலை 5 மணிக்குள் செல்போன் மூலமாக அல்லது உதவி பேராசிரியர், மீன் வளர்ப்பு துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி - 628008, செல்போன் எண் 80722 08079, 96002 05124, மின் அஞ்சல்: anix@tnfu.ac.in, betsy@tnfu.ac.in என்ற முகவரியில் தொடர்பு கொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.