தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீரக்கும் கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு ேபாலீஸ் நிலையங்களில் புகார் அளித்த 31 பேர் மற்றும் புதிதாக 18 பேர் என மொத்தம் 49 பேர் போலீஸ் சூப்பிரண்டடிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கட்டுப்பாட்டு அறைஇன்ஸ்பெக்டர் ரேனியஸ்ஜேசுபாதம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
Related Tags :
Next Story