தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில்  1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

காற்றழுத்த தாழ்வுநிலை

வங்கக்கடலில் வடக்கு ஓடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை அருகே நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலை கொண்டு உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

எச்சரிக்கை

இதன் காரணமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தொலைதூர புயல் அறிவிப்பான 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது. ஆனால் மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.


Next Story