உளுந்தூர்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உளுந்தூர்பேட்டை,
மின்கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டிப்பது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவிர்ப்பது, மக்கள் விரோத போக்கினை நாள்தோறும் கடைபிடித்து வரும் விடியா தி.முக. அரசை கண்டித்து ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கே.ஜி.பி. ராஜா மணி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கோமுகி மணியன், மாவட்ட அவை தலைவர் சம்பத், நகர செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவை தலைவர் முத்துரங்கன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர்கள் எரிட்டி ஏழுமலை, மீசை இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு, தி.மு.க. அரசை கண்டித்து உரை ஆற்றினார்கள். இதில் பேரவை செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, அய்யனார், சீனிவாசன், செந்தில்குமரன், ரமேஷ், ஏ.அய்யனார், முருகதாஸ், மதுசூதனன், கர்ணன், சிவக்குமார், நகர செயலாளர்கள் சோலையப்பன், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.