ஏரல் அருகே உமரிக்காட்டில் ரூ.14 லட்சத்தில் பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே உமரிக்காட்டில் ரூ.14 லட்சத்தில் பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது.
தூத்துக்குடி
ஏரல்:
ஏரல் அருகே உள்ள உமரிக்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பஞ்சாயத்து நிதியிலிருந்து ரூ.14 லட்சத்து 35 ஆயிரம் மதிபீட்டில் 3 பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி தலைமை தாங்கினார். கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். உமரிக்காடு பஞ்சாயத்து தலைவரும், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவருமான ராஜேஷ்குமார் பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து உறுப்பினர்கள், பஞ்சாயத்து செயலர் வாசுதேவன், மக்கள் நல பணியாளர் விஜயா மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story