வலங்கைமானில், அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


வலங்கைமானில், அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x

வலங்கைமானில், அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திருவாரூர்

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியை, பொதுச்செயலாளராக கோர்ட்டு அறிவித்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையமும் நேற்று அவரை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அதன்படி வலங்கைமான் கடைத்தெருவில் ஒன்றியக்குழு தலைவர் சங்கர் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் ராணி துரைராஜ், நகர செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட இணை செயலாளர் ஜெயபால், மாவட்ட பிரதிநிதி முனுசாமி, 44. ரெகுநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரன், தொழுவூர் ஊராட்சி செயலர் சம்பத், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் மூர்த்தி மற்றும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


Next Story