மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்100 நாள் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்100 நாள் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 100 நாள் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 100 நாள் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி பொறுப்பாளர் சந்திரன் தலைமை தாங்கினார்.

100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 2 மாத கூலியை வட்டியுடன் உடனே வழங்கவேண்டும். 100 நாள் வேலை திட்டத்துக்கு வழங்கப்பட்ட நிதியை குறைக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகி சிவக்குமார், எஸ்.சி.நடராஜ், சுரேந்திரன், சரவணன் உள்பட பவானிசாகர் தொகுதியை சேர்ந்த 100 நாள் திட்ட தொழிலாளர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

பவானிசாகர்

இதேபோல் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் 100 நாள் வேைல திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் வேலுமணி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். பவானிசாகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள்.

தாளவாடி

தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் மோகன் தலைமை தாங்கினார். 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.


Related Tags :
Next Story