வேதாரண்யத்தில், டிரைவர் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
வேதாரண்யத்தில், டிரைவர் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
வேதாரண்யத்தை அடுத்த மூர்த்தியன்காட்டைச்சேர்ந்தவர் லட்சுமணன்(வயது45). இவர் வேதாரண்யம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மேலராஜாளி காட்டை சேர்ந்த தனது உறவினரான கீதாவின் கணவர் சங்கருக்கு தொழில் செய்வதற்காக ஒரு தனியார் நிறுவனத்தில் லட்சுமணனும், மற்ற 2 டிரைவர்களும் சேர்ந்து 3 பேர் ஜாமீன் போட்டு ரூ.30 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் சங்கர் பணத்தை சரியாக கட்டவில்லை என அந்த நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஜாமீன் போட்ட 3 பேரின் சம்பள பணத்தை பிடித்தம் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் லட்சுமணன் புகார் அளித்துள்ளார். நேற்று லட்சுமணன் தனது குடும்பத்துடன் கீதாவின் வீட்டு முன்பு பணம் கேட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.