வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள 50 மனுக்களுக்கு தீர்வு
வீரபாண்டியில் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள 50 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
தேனி
வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது. பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமை தாங்கினார். இதில் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 60 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. அதில் புகார் மனுதாரர்கள் மற்றும் புகார்களில் சம்பந்தப்பட்டவர்கள் என இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் 50 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் நில பிரச்சினை தொடர்பான 10 மனுக்கள் நேரடியாக சென்று தீர்வு வழங்கப்பட உள்ளது. இதில் வீரபாண்டி சப்- இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணன் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story